வேகமெடுக்கும் ரணிலின் ரகசிய நகர்வு
இலங்கையில் அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் தற்போது விளக்கமளித்துள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தற்காலிக அரச அதிபராக பதவியேற்றதும் அவசர நிலையை பிரகடனப்படுத்துவார் என பிரதமரின் பேச்சாளர் தினூக் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் பதில் அரச அதிபர் என்ற வகையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடளாவிய ரீதியில் அவசரகாலச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மேல் மாகாணத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பாதுகாப்புப் பிரிவினருக்கு பதில் அரச அதிபர் என்ற ரீதியில் பிரதமர் பணிப்புரை விடுத்துள்ளதாகவும் ஊடகங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.