சுனாமி பேரனர்த்தத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு!

#SriLanka #tsunami
Mayoorikka
12 hours ago
சுனாமி பேரனர்த்தத்தின் 20 ஆம் ஆண்டு நிறைவு!

இலங்கை வரலாற்றில் மாறா வடுவாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு நாளை 20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடாளவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

 சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் இன்று (26) காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன. சுனாமி அனர்த்தத்தில் சேதமடைந்த 50 ஆம் இலக்க என்ஜினுடனான தொடருந்து ஒன்றும் வழமைபோல பெரேலியவை சென்றடையவுள்ளதோடு ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குழுவொன்றும் அந்த தொடரூந்தில் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுமாத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக, இலங்கையின் 14 கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டதுடன் சுமார் 35,000 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!