ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் கோத்தாபய ராஜபக்‌ஷ கடும் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்

Kanimoli
2 years ago
ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் கோத்தாபய ராஜபக்‌ஷ கடும் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்

  மாலைதீவின் பிரதமருக்கு நெருக்கமான வர்த்தகர்க்கு உரித்தான ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் கோத்தாபய ராஜபக்‌ஷ கடும் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலைதீவில் கோட்டாவிற்கு எதிராக வெடித்த போராட்டத்தை அடுத்து அவர் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

ராஜபக்ஷவுக்குஅடைக்கலம் கொடுத்தமைக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அதிகளவான இலங்கையர்களும் பங்கேற்ற நிலையில் பொலிசார் குவிக்கப்பட்டு பதாதைகள் பறிக்கப்பட்டதுடன் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

எனினும் இன்னும் சிங்கப்பூர் புறப்படவில்லை எனவும் இன்று இரவிற்குள் அவர் வெளியேறிவிடுவார் எனவும் கூறப்படுகின்றது. இதேவேளை குறித்த ஹோட்டலுக்கான நாளாந்த வாடகையாக இலங்கை மதிப்பீட்டில் சுமார் 32 லட்சம் அறவிடப்படுவதாகவும் மேலும் தெரியவருகிறது.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!