பிரதமர் ஒருவரை நியமிக்குமாறு சபாநாயகருக்கு ரணில் பணிப்பு
Kanimoli
2 years ago
அரசாங்கமும் எதிர்க்கட்சியும் ஏற்றுக்கொள்ளக்கூடிய பிரதமரை நியமிக்குமாறு பதில் ஜனாதிபதியும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அறிவித்துள்ளார்.
அரசாங்கத்தினாலும் எதிர்க்கட்சிகளினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒருவரை பரிந்துரை செய்யுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, ரணில் விக்ரமசிங்க பதவியிலிருந்து விலக வேண்டுமென கட்சித் தலைவர்கள் கோரியுள்ள நிலையில், பிரதமர் ஒருவரின் பெயரை பரிந்துரை செய்யுமாறு சபாநாயகரிடம் ரணில் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.