நாடாளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் பதில் தாக்குதல் நடத்த அனுமதி வழங்குமாறு பாதுகாப்பு பிரிவு கோரிக்கை
#SriLanka
Prasu
2 years ago
அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் சற்று முன்னர் நிறைவடைந்துள்ளது.எனினும், இந்தக் கூட்டத்தில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவில்லை என எதிர்க் கட்சியின் பிரதம அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மான் கிரியெல்ல குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த சந்திப்பில் முப்படைத் தளபதிகள் கலந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடாளுமன்றம் மீது தாக்குதல் மேற்கொண்டால், பதில் தாக்குதலை நடத்துவதற்கு தமக்கு அனுமதி வழங்குமாற முப்படையினர் இதன்போது கோரிக்கை விடுத்ததாகவும், இதற்கான அனுமதியை தம்மால் வழங்க முடியாது என தாம் தெரிவித்ததாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.
இதேவேளை, பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் நியமிக்கப்பட்டால் மாத்திரமே, தாம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயார் எனவும் அவர் கூறினார்.