நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து இலங்கை திருச்சபை கவலை

Prathees
2 years ago
நாட்டில் இடம்பெறும் சம்பவங்கள் குறித்து இலங்கை திருச்சபை கவலை

நாட்டில் தற்போது இடம்பெற்று வரும் சம்பவங்கள் தொடர்பில் கவலையடைவதாகவும் அதிகாரங்களை பயன்படுத்துபவர்கள், மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர், பொலிஸார் பொறுப்புடன் செயற்பட வேண்டுமென இலங்கை திருச்சபை  தெரிவித்துள்ளது.

இலங்கை திருச்சபை வெளியிட்டுள்ள அறிகையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நெருக்கடி நிலைமையினை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஒருமித்த கருத்தினை எட்ட முடியாது நாடாளுமன்ற செயற்பாடுகள் முற்றிலும் சீர்குலைந்து போயுள்ளதாக தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை நசுக்கவோ அல்லது அமைதியான போராட்டத்திற்கு தீங்கு விளைவிப்பதற்காகவோ அவசரகால சட்டத்தினை பயன்படுத்தக்கூடாது எனவும் இலங்கை திருச்சபை மேலும்,  வலியுறுத்தியுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!