இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் சென்று உலக சாதனை படைத்த சவுதி அரேபிய விமானம் !
#Sri Lanka President
#Flight
Nila
2 years ago
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஏற்றிச் சென்ற சவுதி அரேபிய விமானம் உலக சாதனை படைத்துள்ளது.
மாலைதீவில் இருந்து இன்று செல்லும் இந்த விமானமே உலகில் அதிகமாக கண்காணிக்கப்பட்ட விமானம் என தெரியவந்துள்ளது.
இது இலங்கையில் ஏற்பட்டுள்ள குழப்பமான அரசியல் விவகாரங்கள் தொடர்பில் உலகளவிலான ஆர்வத்தை கோடிட்டு காட்டியுள்ளது
Flightradar24.com என்ற இணையத்தள தரவுகளின்படி சவுதி அரேபியாவில் விமானம் மாலைதீவு தலைநகர் மாலேவில் இருந்து ஜி.எம்.டி நேரடிப்படி இன்று காலை 7.43 அளவில் புறப்பட்டுள்ளது.
புறப்பட்டத்தில் இருந்து 5 ஆயிரம் இணைய பயனர்களால் விமானம் கண்காணிக்கப்பட்டுள்ளது.
இது ஐரோப்பா வானில் பறக்கும் பிரான்ஸ் விமானப்படைக்கு சொந்தமான விமானத்தை கண்காணிக்கும் நபர்களை விட மூன்று மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.