அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கொடுப்பனவுகள் அதிகரிப்பு!
அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் திருத்தப்பட்ட இழப்பீட்டுத் திட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, வறிய குடும்பங்களுக்கு முன்னர் வழங்கப்பட்ட உதவித்தொகை 8500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மிகவும் வறிய குடும்பங்களுக்கு வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவை 17,500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நலன்புரிப் பலன்களைப் பெறும் சமூகப் பிரிவுகளில், 480,000 மக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு மாதாந்திர நல உதவித்தொகை ரூ.5,000 மற்றும் ரூ.17,000 வழங்கப்படும்.
எவ்வாறாயினும், ஏற்கனவே பலன்களை பெற்று, பல்வேறு காரணங்களால் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ள பயனாளிகளுக்கும், மேன்முறையீட்டு மனுக்களை சமர்ப்பித்து தற்போது பரிசீலனைக்கு உள்ளான விண்ணப்பதாரர்களுக்கும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.