ராஜபக்சே இறந்ததாக வந்த செய்தி ஆதாரமற்ற வதந்தியாகும்!! - விரைவில் ஆதாரத்துடன் உண்மை வெளிவரும் வரை பொறுமை காக்கவும்!..

Prabha Praneetha
2 years ago
ராஜபக்சே இறந்ததாக வந்த செய்தி ஆதாரமற்ற வதந்தியாகும்!! - விரைவில் ஆதாரத்துடன் உண்மை வெளிவரும் வரை பொறுமை காக்கவும்!..

இலங்கை ஜனாதிபதி கோட்டபாயராஜபக்ச அவருக்கு எதிரான பொதுமக்கள் போராட்டங்கள் வலுப்பெற்ற பின் மன அழுத்தம் காரணமாக மிகவும் குழப்பம் அடைந்திருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் எந்தவித ஆதாரங்களையும் ஊடகங்கள் வெளியிட்டிருக்கவில்லை எனினும் ஜனாதிபதி மாலைதீவில் தங்கியிருக்கின்ற பொழுது அவர் மிகவும் மனஅழுத்தத்தில் இருப்பதாக இலங்கையின் சபாநாயகர் மகிந்தயாப்பா அபேவர்தன ஊடகங்களுக்கு செய்தி வெளியிட்டிருந்தார்.

இதேவேளை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கோட்டபாய அவர்கள் சிங்கப்பூரில் இருதய சத்திர சிகிச்சைக்கு உற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்பொழுது சிங்கப்பூர் சென்றடைந்திருக்கின்ற கோட்டபாய அவர்களின் உடல்நிலை தொடர்பில் ஆதாரமற்ற செய்திகள் பல சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இது தொடர்பில் உண்மைச்செய்தியை கொண்டு வர எமது உலகலாவிய நிருபர்கள் முனைப்புக்காட்டி வருகின்றனர்.

அதுவரை ஆதாரமில்லாத செய்திகளை நம்பாதிருக்குமாறு (lanka4.com) சுட்டிநிற்கிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!