சட்டவிரோத போராட்டம் மற்றும் பாசிசத்துக்கு எதிராக போராடுவேன் - ரணில்(Photo)
சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் மற்றும் பாசிச செயற்பாடுகளுக்கு எதிராகப் போராடவுள்ளதாக பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த மிக அமைதியான போராட்டத்தை பாசிச வாதிகள் ஆட்சிமாற்றத்துக்காக பயன்படுத்திக் கொள்ள நான் அனுமதிக்க மாட்டேன் நீங்கள் பாதுகாத்துக் கொள்வதற்காக போராடும் நாட்டை அழிப்பதற்காக அவர்கள் சதித்திட்டங்களை மேற்கொண்டுள்ளனர்.
கிளர்ச்சிகள் மற்றும் அரசியலமைப்புக்கு அப்பால் மேற்கொள்ளப்பட்ட போராட்டங்கள் காரணமாக இந்த நாடு முகம் கொடுத்த இன்னல்களை நீங்களும் நானும் நன்றாக அறிந்துள்ளோம்.
அப்படியான ஒரு யுகம் மீண்டும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே நீங்கள் போராடினீர்கள். அந்த வகையில் பாசிசத்துக்கு எதிரான போரில் நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன் என்றும் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.