முகமூடி அணிவது குறித்து சுகாதாரத் துறையின் நினைவூட்டல்

Prathees
2 years ago
முகமூடி அணிவது குறித்து சுகாதாரத் துறையின் நினைவூட்டல்

முகமூடி அணிவது கட்டாயமில்லையென்றாலும், அது தொடர்பில் அதிக கவனம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத், மக்கள் மத்தியில் பழகும் போது ஏனைய சுகாதாரப் பழக்கவழக்கங்கள் மற்றும் முகமூடி அணிதல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவது அவசியமானது என தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களில் 10 ஆக பதிவாகியிருந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் தினசரி எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது.

இலங்கையில் நேற்று 34 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாதவர்கள் மீண்டும் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது மிகவும் அவசியம் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!