தொடர்ந்தும் நெருக்கடி நிலை நீடிப்பின் கல்வியைத் தொடர கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள தீர்மானங்கள்
தொடர்ந்தும் நெருக்கடி நிலை நீடிப்பின், கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான மாற்று வழிகள் குறித்து கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அண்மையில் கல்வி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டதோடு. தேவையான நடடிக்கைகைள மேற்கொள்வதற்கு தொடர்புடைய நிறுவனங்களுக்கு பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
1. பாடசாலை நடைபெறும்
நாட்களை குறைத்தல் : திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய தினங்களில் பாடசாலைகளை நடாத்துவற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதிபர் விரும்பினால் திங்கள், செவ்வாய், வெள்ளி ஆகிய தினங்களிலும் நடாத்த முடியும்.
2. பாடசாலை நடைபெறும் நேரத்தில் மாற்றம்: தரம் 1-5 வரை பொருத்தமான வகையிலும் தரம் 6-13 வரை மாலை2.30 வரையும் பாடசாலையை நடாத்தல்
3. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து: ஆசிரியர்களுக்கு மாகாண,
தேசிய பாடசாலை வேறுபாடுகள் இன்றி தற்காலிக இணைப்பு வழங்கல் மற்றும் மாணவர்களுக்கும் தேசிய மாகாணப் பாடசாலை வேறுபாடுகள் இன்றி இணைப்பு வழங்கல்.
4. பாடசாலை ஒன்றில் போதுமான ஆசிரியர்கள் இல்லாவிட்டால்....
1. ஆசிரிய ஆலோசகர்கள், பாட பணிப்பாளர்களின் உதவிகளைப் பெறல்.
2. ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவையைப் பெற்றுக் கொள்ளல் (தன்னார்வ அடிப்படையில்)
3.அதிபர் தீர்மானிக்கும் ஏனையோரின் உதவிகளைப் பெறல்
5. மாணவர் பிரச்சினை - மதிய நேர உணவு விநியோகம், அரிசி விநியோகம் (சீனா உதவியின் கீழ்)
6. பாடத்திட்டத்தை அமுல்படுத்தல் - பாடசாலைகள் வாரத்தில் 3 நாட்கள் மாத்திரம் நடைபெறுவதால் இழக்கப்படும் நாட்களை கருத்திற் கொண்டு தேவையான அடிப்படை கற்றல் தேர்ச்சிகள் அடங்கிய அமைச்சின் பாட பணிப்பாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்களின் உதவியுடன் தயாரித்து வெளியிடல்
தொகுப்பொன்றை தேசிய கல்வி நிறுவகம் மற்றும் கல்வி அமைச்சின் பாட பணிப்பாளர்கள், மாகாணக் கல்விப் பணிப்பாளர்களின் உதவியுடன் தயாரித்து வெளியிடல்.
இந்த பிரேரணைகள் முன்வைக்கப்பட்டதுடன், இவற்றை நடைமுறைப்படுத்துவற்தகான சுற்றறிக்கைகள் தயாரிக்கப்பட்டு அவை வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்தன.