பேருந்து கட்டணங்களில் திருத்தம் செய்வது குறித்து நடவடிக்கை!
Mayoorikka
2 years ago
எரிபொருள் விலை திருத்தத்தின் மூலம் அந்த நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க முடியும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அண்மைய நாட்களில் எரிபொருள் விலை அதிகரிப்புடன் பேருந்து கட்டணங்கள் மற்றும் முச்சக்கரவண்டி கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு பேருந்து கட்டணங்கள் குறைக்கப்படுமா என்பது குறித்து வினவியதற்கு, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன பதிலளித்தார்.
எரிபொருள் விலையை குறைப்பது மிகவும் நல்ல விடயம். உண்மையில் இந்த நேரத்தில் டீசல் போதியளவில் இருந்திருந்தால் அந்த பலனை மக்களுக்கு வழங்க முடிந்திருக்கும். அரசு விலையை குறைத்து எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்தினால் நாம் அந்த பலனை மக்களுக்கு வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.