மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு
Prabha Praneetha
2 years ago
அடுத்த இரண்டு வாரங்களில் இந்தியாவில் இருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் நாட்டிற்கு வரும் என விவசாயத்துறை அமைச்சு கூறியுள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த இருப்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்திய கடனின் கீழ் கொள்முதல் செய்யப்பட்ட 65,000 மெட்ரிக் தொன் உரத்தில் இருந்து மொத்தம் 44,000 மெட்ரிக் தொன் உரம் கடந்த வாரம் நாட்டிற்கு வந்துள்ளது.