புதிய ஜனாதிபதி தெரிவு தொடர்பாக நாளை இறுதி தீர்மானம்- மனோ கணேசன்
Prabha Praneetha
2 years ago
ஜனாதிபதி தெரிவு தொடர்பாக நாளை இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு நாளை மாலை 6 மணிக்கு கட்சி செயலகத்தில் ஒன்றுகூடவுள்ளது.
இதன்போதே, எதிர்வரும் 20ம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுக்கள் சமர்பித்துள்ள அனைத்து வேட்பாளர்கள் தொடர்பிலும் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.