ரயிலில் மோதி கார் விபத்து- 6 பேர் காயம்!
Prabha Praneetha
2 years ago
காலி – மாகல்ல அனுலாதேவி பெண்கள் கல்லூரிக்கு அருகில் இன்று காலை காரொன்று ரயிலில் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்தில் காரில் பயணித்த கர்ப்பிணி பெண் மற்றும் இரண்டு சிறு பிள்ளைகள் உட்பட 6 பேர் காயமடைந்து கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோதே கார் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.