குருந்தூர் மலையில் விஹாரை: சாணக்கியனும் சுமந்திரனும் பாரிய தடை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் குருந்தூர் மலையில் விஹாரைகட்டுவதற்கு பாரிய தடையாக இருப்பதாக தேரர் ஒருவர் விசனம் தெரிவிக்கும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
இதுகுறித்து இரா.சாணக்கியன் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.
‘நாங்கள் இருவரும் வடக்கு, கிழக்கில் சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் பல்வேறு விடயங்களுக்கு கடுமையான முறையில் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றோம்.
குறிப்பாக குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விஹாரை தொடர்பிலும் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவேதான் எங்களுக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையினை இந்த தேரர் முன்னெடுத்துள்ளார்.
தற்போது இலங்கையில் அனைத்து இனங்களும் ஒற்றுமையாக ஒருமித்து பயணிக்கும் நிலையில் இவ்வாறான சிலரின் செயற்பாடுகளினால் இன நல்லிணக்கம் பாதிக்கப்படும் அபாயம் காணப்படுகின்றது.
இதன்காரணமாகவே இவ்வாறான இனவாதிகளின் செயற்பாடுகளுக்கு நாம் தடைகளை ஏற்படுத்துகின்றோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.