கட்டணத்தை செலுத்தாத சிறிலங்கா காவல்துறை

Kanimoli
2 years ago
கட்டணத்தை செலுத்தாத சிறிலங்கா காவல்துறை

நீர்தாரை பிரயோகங்களின் போது பயன்படுத்தப்பட் தண்ணீர்க்கான பணத்தை சிறிலங்கா காவல்துறை இன்னுமும் செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற மக்கள் போராட்டங்களின் போது போராட்டக்காரர்களை கலைக்க நீர்தாரைகள் பிரயோகிக்கப்பட்டது.

இதற்கு பாரிய அளவிலான தண்ணீரை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையிடமிருந்து சிறிலங்கா காவல்துறை பெற்றுக் கொண்டுள்ளது.

குறித்த தண்ணீருக்கான தொகை இன்னும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்தப்படவில்லை என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏனைய மாவட்டங்களில் இருந்து கண்ணீர் புகை குண்டுகளை கொழும்புக்கு கொண்டு வருவதற்கு சிறிலங்கா காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின் போது பெருமளவிலான கண்ணீர் புகை குண்டுகள் பயன்படுத்தப்பட்டதால், கொழும்பு காவல் நிலையங்களில் குறைந்த எண்ணிக்கையிலான கண்ணீர் புகை குண்டுகள் மட்டுமே எஞ்சியுள்ளன என்று சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!