இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய அமெரிக்கா செல்வதை தவிர்த்தது ஏன்?

Nila
2 years ago
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய அமெரிக்கா செல்வதை தவிர்த்தது ஏன்?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் இலங்கைக்கு திரும்பி வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பில் தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், தென்னிலங்கை அரசியல் பரபரப்பு நிலை ஏற்பட்டுள்ளது. 

தற்போது சிங்கப்பூரில் தங்கியுள்ள கோட்டபாய அங்கிருந்து சவூதி அரேபியாவுக்கு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

சவூதி சென்றதன் பின்னர் அங்கிருந்து நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. 

அமெரிக்காவில் குடியுரிமையை கொண்டிருந்த கோட்டாய அங்கு செல்வதை தவிர்த்து வருகிறார். 

அங்கு வாழும் அவரின் மகனின் பாதுகாப்பிற்காகவே அமெரிக்கா செல்வதற்கான திட்டத்தை முழுமையாக கைவிட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

கோட்டாபய அடுத்த மாதம் நாடு திரும்பவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உள்ளிட்ட சபை உறுப்பினர்கள் குழுவிற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தில், தாய்நாட்டிற்கு தன்னால் இயன்றவரை சேவையாற்றியதாகவும் தொடர்ந்தும் தன்னால் இயன்ற பங்களிப்பை வழங்க அர்ப்பணிப்புடன் உள்ளேன் எனவும் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.