காட்டுப்பகுதியில் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் படுகாயம்
Kanimoli
2 years ago
வவுனியா -புளியங்குளம் காட்டுப்பகுதியில் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த இளைஞன் நேற்று (17) பிற்பகல் காட்டுப்பகுதியில் படுகாயமடைந்த நிலையில் அப்பகுதி மக்களால் புளியங்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன்படி, புளியங்குளம் பகுதியை சேர்ந்த நடராசா தர்மராசா (வயது 33) என்பவரே இந்நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞர் தேன் எடுப்பதற்காக எட்டு பேர் கொண்ட குழுவுடன் இணைந்து புளியங்குளம் கச்சக்கொடி பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்ற போதே கரடியால் தாக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.