அழுத்தங்களை பிரயோகிப்பவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தவும் - மஹிந்த யாபா அபேவர்தன

Kanimoli
2 years ago
அழுத்தங்களை பிரயோகிப்பவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தவும் - மஹிந்த யாபா அபேவர்தன

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்களை பிரயோகிப்பவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன சிறிலங்கா காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய அதிபரை தெரிவு செய்வதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு எதிரவரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், சமூக ஊடகங்கள் ஊடாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களினால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அறிவித்தல் விடுத்திருந்தனர்.

குறித்த அறிவித்தலை கருத்திற்கொண்டு சபாநாயகர் மகிந்த மஹிந்த யாபா அபேவர்தன சிறிலங்கா காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய அதிபரை தெரிவு செய்வதில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைக்கு எதிராக சமூக வலைத்தளங்கள் ஊடாக செல்வாக்கு செலுத்துபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பதில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று பணிப்புரை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!