ரணிலின் நாடகம் இரத்த குளமாக மாறும் இலங்கை

Kanimoli
2 years ago
ரணிலின் நாடகம் இரத்த குளமாக மாறும் இலங்கை

அண்மையில் பதில் ஜனாதிபதியாக பதவியேற்ற ரணில் விகரமசிங்க, காயமடைந்த இராணுவத்தினரைப் பார்வையிடுவதற்காக இராணுவ மருத்துவமனைக்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில் அவ்வாறானதொரு செயலை அவர் இதற்கு முன்னர் ஒரு போதும் செய்ததில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிக்க பதில் ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

இந்த நடவடிக்கை மூலம் சில அரசியல் குழுக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக செயற்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தல் மூலம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானால் நாட்டை இரத்தக் குளமாக மாற்றக்கூடிய காரணியாக அது மாறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!