ரணிலுக்கு எதிரான மனு தொடர்பான தீர்மானம் இன்று
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றுக்கு கொண்டுவரப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதா? இல்லையா? என உயர்நீதிமன்றம் நாளை அறிவிக்கவுள்ளது.
வினிவித முன்னணியின் பொதுசெயலாளர் சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு காலம் கடந்து தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய சட்டமா அதிபர் திணைக்களம், இவ்வாறானதொரு மனு தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டதையும் மன்றில் எடுத்துரைத்தார்.
அத்துடன் இந்த மனுவை தள்ளுபடி செய்யுமாறு, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சார்பில் மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்த நிலையில், குறித்த மனுவை விசாரணைக்கு எடுப்பதா? இல்லையா? என்பதை உயர் நீதிமன்றின் மூவர் அடங்கிய நீதியரசர்கள் ஆயம் இன்று அறிவிக்கவுள்ளது.