ஜனாதிபதி தெரிவில் திடீர் திருப்பம்

Kanimoli
2 years ago
ஜனாதிபதி தெரிவில் திடீர் திருப்பம்

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நான்கு வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய தயாராக உள்ளனர். வேட்பாளர்களில் பதில் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் உள்ளார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிகளுக்கு தமது ஜனாதிபதி வேட்பாளரே தீர்வுகளை வழங்க முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், முன்னாள் அமைச்சருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களாக நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரும் இன்று வேட்புமனுக்களை சமர்ப்பிக்க உள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் நாடாளுமன்றத்தில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள 04 வேட்பாளர்களில் ஒருவர் இன்று வேட்புமனுக்களை சமர்ப்பிக்காமல் இருக்கத் தீர்மானித்துள்ளதாக, அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறான நிலையில், ஜனாதிபதி வேட்பாளராக அதே கட்சியின் மற்றுமொரு உறுப்பினரின் பெயரை சமர்ப்பிக்க வேட்பாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல் கட்சிகள் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!