நீண்ட நாட்களாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் கைது!
Prabha Praneetha
2 years ago
மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியில் நீண்ட நாட்களாக வீடு உடைத்து கொள்ளையிட்ட 24 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட 6 எரிவாயு வெற்றுச் சிலிண்டர்கள், தங்க ஆபரணங்கள், சிடி பிளோயர், பணம் மற்றும் திருட்டுக்கு பயன்படுத்திய ஆயுதங்களை மீட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பொலிஸ் பிரிவில் நீண்ட நாட்களாக வீடுகள் உடைத்து கொள்ளையிடப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைத்த நிலையில், பொலிஸாரினால் தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இந்த நிலையிலேயே நேற்று குறித்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.