50 ரூபாவால் பாணின் விலையை குறைக்க முடியும்!
Prabha Praneetha
2 years ago
பாண் ஒன்றின் விலையை 50 ரூபாவால் குறைக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.
டீசல், எரிவாயு மற்றும் கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டால், இவ்வாறு பாணின் விலையை குறைக்கமுடியும் என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே சங்கத்தின் தலைவர் ஜயவர்தன இதனை குறிப்பிட்டுள்ளார்.