வெளிநாட்டிலிருந்து மூன்று செயற்பாட்டாளர்களுக்கு பணம் அனுப்பப்பட்டதாக வெளியான தகவல் பொய்: சிஐடி அறிக்கை
Prathees
2 years ago
காலி முகத்திடல் போராட்டத்தில் கலந்து கொண்ட மூன்று செயற்பாட்டாளர்களுக்கு வெளிநாட்டில் இருந்து இலங்கையில் உள்ள வங்கி ஒன்றில் நான்கரை கோடி பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்திகள் பொய்யானவை என குற்றப் புலனாய்வு திணைக்களம் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளது.
யூனியன் பிளேஸில் அமைந்துள்ள அரச வங்கியொன்றுக்கு இந்த தொகை வெளிநாட்டில் இருந்து வரவு வைக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.