காலி முகத்திடல் போராட்டப் பகுதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு
Prabha Praneetha
2 years ago
காலி முகத்திடல் போராட்ட களப் பகுதியில் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹல் தல்துவ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.