எதிர்க்கட்சி தலைமை பதவியையும் இழக்கும் சஜித்...

Prathees
2 years ago
எதிர்க்கட்சி தலைமை பதவியையும் இழக்கும் சஜித்...

சமகி ஜன பலவேகவின் சுமார் பதினைந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாராளுமன்றத்தில் வாக்களித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டார்.

அவர்களில் 08 பேர் தமிழ் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் எனவும் ஏனையவர்கள் சிங்களவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதியினால் அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் சமகி ஜன்பலவேகவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இணையவுள்ளதாகவும் அவர்களில் சிலருக்கு அரசாங்கத்தில் பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், எதிர்க்கட்சியின் பெரும்பான்மையை இழந்துள்ள நிலையில், சஜித் பிரேமதாச வகித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி, எதிர்க்கட்சியின் பெரும்பான்மையை வைத்திருக்கும் கட்சி அல்லது குழுவிடம் பறிபோகும் அபாயமும் உள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!