இன்று முதல் எண் முறைப்படி எரிபொருள் விநியோக திட்டம்
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் படி இன்று முதல் எரிபொருள் விநியோகம் செய்யப்படும்.
QR குறியீட்டின் அடிப்படையில் எரிபொருள் வெளியீடு தொடங்கும் வரை சிபெட்கோ நிரப்பு நிலையங்களில் இருந்து எரிபொருள் வெளியிடப்படும் என எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வாகன இலக்கத்தகட்டில் 0, 1, 2 ஆகிய கடைசி இலக்கங்களைக் கொண்ட வாகனங்களுக்கு இன்று மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 3, 4, 5 ஆகிய இலக்கங்களுக்கான எரிபொருள்களை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் 6,7,8,9 எண்களுக்கு எரிபொருள் வழங்கப்படுகிறது.
இருப்பினும், கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு இங்கு எரிபொருள் வெளியிடப்படுகிறது. அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கு அதிகபட்சமாக ரூ.1,500, முச்சக்கர வண்டிகளுக்கு ரூ.2,000 மற்றும் மற்ற வாகனங்களுக்கு ரூ.7,000க்கு உட்பட்டு எரிபொருள் வழங்கப்படும்.
இதேவேளை, QR குறியீட்டின் அடிப்படையிலான எரிபொருள் விநியோகம் ஜூலை 25 முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும். ஆனால் அதன் முன்னோடி திட்டம் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை கொழும்பில் பல இடங்களில் அமுல்படுத்தப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.