நாட்டின் அதிபர் என்ற வகையில் நாடு எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தை நடைமுறைப்படுத்தவும் - சஜித் பிரேமதாச

Kanimoli
2 years ago
நாட்டின் அதிபர் என்ற வகையில் நாடு எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தை நடைமுறைப்படுத்தவும் -  சஜித் பிரேமதாச

நாட்டின் அதிபர் என்ற வகையில் நாடு எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்தை நடைமுறைப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அதிபராக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய சஜித் பிரேமதாஸ, இன்றைய சூழலில் அரசியல் மாற்றம் மிகவும் அவசியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என்றும், இந்த திருத்தங்களே நாட்டை தற்போதைய குழப்பத்திற்கு தள்ளியுள்ளதாகவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விமர்சித்துள்ளார்.

முதன்மையானதாக இருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச மேலும் சாடியுள்ளார்.

அறிவியல் பகுத்தறிவை விட கட்டுக்கதைகளுக்கு முன்னுரிமை அளித்தமை பொதுமக்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

69 இலட்சம் மக்கள் வாக்குகளைப் பெற்ற அதிபருக்கு எதிராக பாரிய மக்கள் எதிர்ப்பு உருவாகியதாகவும் அதன் காரணமாக தனது பதவியில் இருந்து விலகுவதற்கு அவருக்கு நேரிட்டது எனவும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

அதன் காரணமாகவே புதிய அதிபரை தேர்வு செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேரும் புரிந்துகொண்டால் சிறந்தது என தாம் எண்ணுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலமைப்பிற்கு உட்பட்டு செயற்பட வேண்டும் என திடமாக நம்புவதாகவும் நாட்டிற்குள் காட்டுச் சட்டத்தை நடைமுறைப்படுத்த முடியாது எனவும் சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

அரசியலமைப்புக்கு உட்பட்டே டளஸ் அழகப்பெருமவும் தாமும் அதிபர் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தத போதிலும் புதிய யுகமொன்றை நோக்கிய நகர்வாகவும் புதிய கலாசாரமாகவும் புதிய வேலைத்திட்டமாகவும் ஒரு அடி பின்வைத்து தாம் அதிபருக்கான போட்டியில் இருந்து விலகிக் கொண்டதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.