அனைவரும் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒருமித்து செயலாற்ற வேண்டும்: டக்ளஸ்

Mayoorikka
2 years ago
அனைவரும் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒருமித்து செயலாற்ற வேண்டும்: டக்ளஸ்

நாடு  அரசியல் மற்றும்  பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ள நிலையில்,  நாட்டை சரியான வழியில் நடத்திச் செல்லக்கூடியவராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதிக்கு அவர் வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்துள்ளார்.

மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு  அனைவரும் கட்சி அரசியலுக்கு அப்பால் ஒருமித்து செயலாற்ற வேண்டிய காலகட்டம் தற்போது  இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய  அரசியல்  சூழலில் தமிழ் மக்களின் கெளரவமான எதிர்காலத்தை ஆழமாக ஆராய்ந்து  பொருத்தமான தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்கள்  தமது தவறான தீர்மானங்களால் மீண்டும் ஒருமுறை தமிழ் மக்களில் அரசியல் பலத்தை வீணடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

வெல்லுகின்ற பக்கத்தில் அணி சேர்வது அரசியல் சாணக்கியமல்ல எனவும் தீர்மானித்த பக்கத்தை வெல்லச்செய்வதே அரசியல் சாணக்கியம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வாழ்த்துச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!