ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது நாடாளுமன்றத்தில் மின்சார துண்டிக்கப்படவில்லை!

Nila
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது நாடாளுமன்றத்தில் மின்சார துண்டிக்கப்படவில்லை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பதவிப் பிரமாண நிகழ்வின் போது மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக வெளியான தகவலை நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ நிராகரித்துள்ளார்.

ரணில். விக்கிரமசிங்க இன்று முற்பகல் நாடாளுமன்ற வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மின்சாரத்தை இயக்க மின்பிறப்பாக்கி பயன்படுத்தப்பட்டு, அது வெற்றிகரமாக பிரதான மின்பாதைக்கு நகர்த்தப்பட்டது.

எனினும் அரச தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்பில் தடை ஏற்பட்டதாக தமக்கு தெரிவிக்கப்பட்டபோதும். என்ன தவறு நடந்தது என்று தமக்கு தெரியவில்லை. என்று படைக்கள சேவிதர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாடாளுமன்றத்தில் மின்தடை ஏற்படவில்லை என உறுதியாக கூறமுடியும் என்றும் நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!