கியூ.ஆர் முறைமைக்கு 30 இலட்சம் வாகனங்கள் பதிவு
நாட்டில் எரிபொருள் விநியோக நடவடிக்கைக்காக அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் அட்டை ஊடான கியூ.ஆர் முறைமைக்கு 30 இலட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவிக்கிறது.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட இணையதளத்தின் ஊடாக மாத்திரம் பதிவு செய்யுமாறும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில் நுட்ப திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் , தனிப்பட்ட தகவல்களை சேகரிக்க முயற்சிக்கும் அங்கீகரிக்கப்படாத இணையதளங்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதால், அது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெறும் 04 நாட்களில் 30 இலட்சம் வாகனங்கள் இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்துள்ளதாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் குறிப்பிடுகின்றது.
எவ்வாறாயினும், வாகன இலக்க தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையிலேயே இன்றைய தினம் எரிபொருள் நிரப்பப்பட்டது. அத்துடன், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பரீட்சார்த்த ரீதியாக கியூ.ஆர். முறைமை வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.