ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்து சில மணித்தியாலங்களில் அகற்றப்பட்ட 'நோ டீல் கம'

Nila
2 years ago
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க  பதவிப்பிரமாணம் செய்து சில மணித்தியாலங்களில்  அகற்றப்பட்ட 'நோ டீல் கம'

அலரி மாளிகைக்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள நோ டீல் கம போராட்டக்காரர்கள் குறித்த இடத்திலிருந்து வெளியேற தீர்மானித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு மே மாதம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டதையடுத்து போராட்டக்காரர்களால் ‘நோ டீல் கம’ அமைக்கப்பட்டது.

மே 09 அமைதியின்மைக்குப் பின்னர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அவர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றவுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ‘நோ டீல் கம’ போராட்ட தளத்தை அலரி மாளிகைக்கு வெளியே அமைத்தனர்.

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க இன்று பதவிப்பிரமாணம் செய்து சில மணித்தியாலங்களுக்கு பின்னரே போராட்டம் நடத்தும் இடம் அகற்றப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!