அரசியல் கசப்பானது, ராஜினாமா செய்கிறேன்: தம்மிக்க
Prathees
2 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சராக குறுகிய காலம் பதவி வகித்த தம்மிக்க பெரேரா, தனது நாடாளுமன்ற பதவியை இராஜினாமா செய்யவுள்ளார்.
இது குறித்து நேற்றைய தினம்ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த தம்மிக்க பெரேரா, அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டுக்காக எந்த வகையிலும் அரசாங்கத்திற்கு உதவுவேன் எனவும் அரசியலில் தாம் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்துடன் பிரச்சினைகளை உருவாக்குவதன் மூலம் அல்ல. தான் அரசியலில் சோர்வாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பசில் ராஜபக்ச பாராளுமன்ற உறுப்பினர் பதவியை விட்டு வெளியேறியதை அடுத்து திரு தம்மிக்க பெரேரா அந்த ஆசனத்திற்கு நியமிக்கப்பட்டார்.