புதிய பிரதமர் தினேஷ்: அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்

Prathees
2 years ago
புதிய பிரதமர் தினேஷ்: அமைச்சரவை  அமைச்சர்கள் இன்று பதவிப் பிரமாணம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தின் புதிய பிரதமராக தற்போதைய சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன இன்று (22ஆம் திகதி) காலை பதவியேற்க உள்ளார்.

பிரதமருடன் புதிய அமைச்சர்கள் குழுவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளது.

அமைச்சரவையில் இதற்கு முன்னர் பதவி வகித்த அமைச்சர்கள் குழு சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வெளியுறவு அமைச்சராக பேராசிரியர் ஜி. எல். பீரிஸுக்குப் பதிலாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தேசிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை இடைக்காலத்திற்கு இந்த அமைச்சரவை செயற்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!