காலி முகத்திடலை சுற்றிவளைத்த பாதுகாப்பு படை: ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற நடவடிக்கை

Prathees
2 years ago
காலி முகத்திடலை சுற்றிவளைத்த பாதுகாப்பு படை:  ஆர்ப்பாட்டக்காரர்களை அகற்ற நடவடிக்கை

காலி முகத்திடலுக்கு முன்பாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மற்றும் கூடாரங்களை அகற்ற இன்று அதிகாலை பாதுகாப்பு தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் இராணுவத்தினர் இன்று அதிகாலை 1.00 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தின் திசையிலிருந்து  வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேறுமாறு அறிவித்துள்ளனர்.

பாதுகாப்புப் படையினருடன் மோத வேண்டாம், இல்லையெனில் அவசரச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

இருப்பினும் கூட்டத்தை கட்டுப்படுத்தும் போது பாதுகாப்பு படையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

தற்போது ஜனாதிபதி செயலகம் மற்றும் அதன் நுழைவு வாயில் (Gate Zero) ஆகியவற்றை இராணுவம் கையகப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காயமடைந்த இருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!