தினந்தோறும் இலங்கையை உன்னிப்பாக கண்காணித்துவரும் உலக நாடுகள்
இலங்கையில் கடந்த பல மாதங்களாக நீடித்துவரும் பொருளாதார நெருக்கடியால் அரசியலமைப்பு தலைகீழாக மாறியுள்ள நிலையில் தொடர் ஆர்ப்பாட்டங்களும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வன்முறைகளையும் உலக நாடுகள் கண்காணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று நள்ளிரவில் காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டகாரர்களை அப்புறப்படுத்தி அவர்கள் முகாமிட்டிருந்த கொட்டகைகளை அகற்றிய படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைக் கண்டித்தது உலக நாடுகள்.
அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உட்பட பிரித்தானியா, கனடா நாடுகள் தத்தம் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் தெரிவிக்கையில்,
காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இருந்து வரும் செய்திகள் குறித்து மிகவும் கவலையடைகிறேன். அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான உரிமையின் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்துகின்றோம் என பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹுல்டன் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகர் தெரிவிக்கையில்,
காலி முகத்திடல் போராட்டக் களத்தில் ஏன் இப்படி நடக்கிறது என்று தெரியவில்லை. அதிகாரிகள் நிதானத்துடன் செயல்படுவதும் வன்முறையைத் தவிர்ப்பதும் முக்கியம் என கனேடிய உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.