மிலேச்சத்தனமான அடக்குமுறை - ரணிலுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்டம்
Nila
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காலிமுகத்திடல் போராட்டக்களம் மீது மேற்கொள்ளப்பட்ட முப்படையினரின் அடக்குமுறையை கண்டித்து நாட்டின் பல இடங்களிலும் போராட்டங்களும் எதிர்ப்புக்களும் இடம்பெற்றுவருகின்றது.
இந்நிலையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒன்றுகூடியள்ள மக்கள் ஜனாதிபதிக்கு எதிராகவும் காலிமுகத்திடலில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான அடக்குமுறைக்கு எதிராகவும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.