மீண்டும் அதிகரிக்கும் கோவிட் மரணங்கள்!
Prabha Praneetha
2 years ago
இலங்கையில் கோவிட் மரணங்கள் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பினால் புதன் கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இலங்கையில் பதிவான சராசரி கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 22 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கமைய, ஜூலை மாதத்தில் 12 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், மொத்த மரண எண்ணிக்கை16535 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூன் 10 ஆம் திகதி பொது இடங்களில் முகக்கவசம் அணிவது என்ற கட்டாய விதியை இலங்கை திரும்பப் பெற்றது.
அதேநேரம் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ஒரு சில பொது போக்குவரத்து மட்டுமே இருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் இப்போது பேருந்துகள் மற்றும் தொடருந்துகளில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.