500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்தது.
Prabha Praneetha
2 years ago
500 மில்லியன் யுவான் பெறுமதியான இரண்டு தொகுதிகளை கொண்ட 500 மெட்ரிக் தொன் அரிசி நாட்டை வந்தடைந்துள்ளது.
இலங்கைக்கான சீன தூதரகம் இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, முதலாவது அரிசி தொகுதி கடந்த 16 ஆம் திகதியும் இரண்டாவது தொகுதி 19 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்துள்ளது.
இலங்கைக்கான சீன தூதரம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்கும் திட்டத்தின் கீழ், 7,900 பாடசாலைகளில், 1.1 மில்லியன் சிறுவர்களுக்காக 3 ஆயிரம் மெட்ரிக் தொன் அரிசி கல்வி அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.