தம்மிக்க பெரேரா இன்னும் பதவியை இராஜினாமா செய்யவில்லை
Prathees
2 years ago
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட தம்மிக்க பெரேரா தொடர்ந்தும் அந்தப் பதவியில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் இதுவரை அறிவிக்கவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
எனவே, அவர் வெளியேறிய பின்னர் யாரை நியமிப்பார்கள் என்பதை சரியாக கூற முடியாது எனவும் பொதுச்செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.