புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விதித்துள்ள விதிமுறைகள்

Prabha Praneetha
2 years ago
புதிய அமைச்சர்களுக்கு ஜனாதிபதி விதித்துள்ள விதிமுறைகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு புதிய விதிகளை விதித்துள்ளார்.

அத்தியாவசிய காரணிகள் தவிர்த்து அமைச்சர்கள் எவரும் நாடாளுமன்ற அமர்வுகளை தவிர்க்கக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சகல அமைச்சர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை  இடம்பெற்றபோது, அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன ஜனாதிபதியின் இந்த ஆலோசனை தொடர்பில் தெளிவுபடுத்தினார்.

எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்காக நாடாளுமன்ற அமர்வுகள் இடம்பெறும் அனைத்து நாட்களிலும் சகல அமைச்சர்களும் அவற்றில் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கினார்.

அதே போன்று அமைச்சர்களிடத்தில் சபையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சபை முதல்வர் பதிலளிக்காமல், விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர்களே பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!