6 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு அடுத்த கம்பிபாடு கடற்கரையை சென்றடைந்துள்ளனர்
Kanimoli
2 years ago
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கையைச் சேர்ந்த மேலும் 6 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடிக்கு அடுத்த கம்பிபாடு கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.
கம்பிபாடு கடற்கரையை சென்றடைந்த இலங்கை தமிழர்களை மீட்ட இராமேஸ்வரம் காவல்துறையினர் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் பின்னர் அவர்கள் மண்டபம் முகாமிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 129 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.