கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு டெல்டா வகையை விட ஐந்து மடங்கு ஆபத்து! -சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை
கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு தற்போது பரவி வருவதால், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முன்னணி சுகாதார ஊழியர் சங்கம், முகக்கவசம் கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் கட்டிடங்களுக்குள் கூடுபவர்களுக்கு கொவிட் பிசிஆர் பரிசோதனை வசதிகளை உடனடியாக வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய கொவிட்- ஒமைக்ரான் விகாரமாக வளர்ந்து வரும் கொரோனா வைரஸை துல்லியமாக அடையாளம் காண்பது கடினம்.
இலங்கையில் தற்போது கொவிட் பரிசோதனைகள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாலும், அத்தியாவசிய பரிசோதனை கருவிகள் பற்றாக்குறை காரணமாக கடுமையான பரவலை எதிர்பார்க்கலாம் என்று சுகாதார நிபுணர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், வைரஸ் மாறுபாடுகள் குறித்த சோதனைகள் நடத்தப்படாததால், பரவும் விகாரகங்கள் குறித்து துல்லியமாக கூற முடியாது என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
தற்போது சுகாதாரப் பாதுகாப்பு இருக்கும் ஆபத்தான, முறைசாரா மற்றும் திட்டமிடப்படாத சூழலில், முகக்கவசங்களை அணிவது கட்டாயமாக்கப்படாவிட்டால், குறைந்தபட்சம் உட்புறக் கூட்டங்களுக்கேனும் முகக்கவசங்கள் அணிவதை கட்டாயமாக்காவிட்டால், மீண்டும் கொவிட் அலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
“மூட்டு வலி, தலைவலி, கழுத்து வலி, மேல் முதுகு வலி, நிமோனியா, இருமல் அல்லது காய்ச்சல் புதிய வைரஸின் முக்கிய அறிகுறிகளாகும் என அவர் சுட்டிக்காட்டுகின்றனர்.”
சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, இந்த விகாரத்தின் ஆபத்து டெல்டா வகையை விட ஐந்து மடங்கு அதிகம் எனவும், இறப்பு விகிதம் டெல்டாவை விட அதிகமாக காணப்படுவதாகவும் ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், இந்த நோய் கடுமையானதாக மாறுவதற்கு குறைந்தளவு காலமே எடுப்பதாகவும் சில சமயங்களில் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை எனவும் தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த வைரஸ் சமூகத்தில் பரவி நுரையீரலை நேரடியாகப் பாதித்து, வைரஸ் நிமோனியாவுக்கு வழிவகுப்பதாகவும், பின்னர் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துவதாகவும், சுகாதார நிபுணர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தயவுசெய்து கவனமாக இருங்கள், நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும், திறந்த இடங்களில் கூட 1.5 மீட்டர் தூரத்தை வைத்திருக்கவும், இரட்டை அடுக்கு முகக்கவசத்தை அணியவும், பொருத்தமான வாய் முகக்கவசத்தை அணியவும், அனைவருக்கும் அறிகுறியற்ற (இருமல் அல்லது தும்மல்) இருக்கும்போது கைகளை அடிக்கடி கழுவவும், அமைச்சு அல்லது அரசாங்க சட்டங்களுக்காக காத்திருக்காமல், உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.” என அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.