இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து போராட்டக்காரர்களில் ஒருவரான தனிஸ் அலியிடம் சிஐடி விசாரணை!

Nila
2 years ago
இலங்கை ரூபவாஹினி கூட்டத்தாபனத்தினுள் அத்துமீறி நுழைந்து போராட்டக்காரர்களில் ஒருவரான தனிஸ் அலியிடம் சிஐடி விசாரணை!

ஜுலை 13ஆம் திகதி, இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் பலவந்தமாக நுழைந்து, ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தனிஸ் அலி என்பவர், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

டுபாய் செல்ல முயற்சித்த நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானத்தினுள் வைத்து குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்ட குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய குறித்த நபரை விசாரணைக்கு உட்படுத்த குற்றப் புலனாய்வு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கொழும்பு கோட்டை மற்றும் காலிமுகத்திடல் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் அடிப்படையில், கடந்த 13ஆம் திகதி சில தரப்பினர் இலங்கை ரூபவாஹினி கூடடுத்தாபனத்திற்குள் பலவந்தமாக நுழைந்து ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில், குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் கூறியுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!