படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட குழுவினர் கைது

Prathees
2 years ago
படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல முற்பட்ட குழுவினர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு வந்ததாக கூறப்படும் 07 பேரையும் மேற்படி குழுவினருடன் வந்ததாக கூறப்படும் இருவரையும் வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வென்னப்புவ - நைனாமடம் பிரதேசத்தில் வைத்து இன்று காலை குறித்த குழுவினர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு, திருகோணமலை ஜா அல மற்றும் மினுவாங்கொட பிரதேசங்களில் வசிப்பவர்களே இவ்வாறு  வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த குழுவில் 02 மற்றும் 10 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த குழுவினர் படகு மூலம் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல தயாராகி வருவதாக தமக்கு தகவல் கிடைத்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!