கோட்டாபய கைது செய்யப்படுவார் என்ற அச்சத்தில் தற்கொலை செய்த விசுவாசி
கொழும்பு மீரிகமவில் ரயிலில் பாய்ந்து நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர் கைது செய்யப்பட உள்ளதாகவும் செய்திகள் பரவியதையடுத்து, குறித்த நபர் இந்த செயலை செய்துள்ளார்.
நேற்று முன்தினம் கிரிபத்கொட மாயா மாவத்தை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய வெவெல்தெனிய பத்திரன்னஹெலகே ஆரியதாச என்பவரே தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று முன்தினம் மதியம் 12.45 மணியளவில் கொழும்பு மீரிகமவில் புகையிரதத்தில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ராகம வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சுதர்சன் ஸ்ரீலால் இந்திரஜித் திஸாநாயக்க வாக்குமூலமளிப்பதற்கு முன்னர் உயிரிழந்தவரின் மகள் தனது தந்தையால் எழுதப்பட்ட கடிதத்தையும் சமர்ப்பித்துள்ளார்.
தனது இறுதிச் சடங்கில் எந்த தேரர்களும் பங்கேற்கக் கூடாது என இறந்தவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.தனது இறுதிச் சடங்குகளை அரசாங்கம் செலவில் செய்ய உத்தரவிடுமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் தனது தந்தை மிகுந்த வருத்தத்தில் காலத்தை கழித்ததாக மகளிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யும் போது அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதியை வெளிநாட்டில் வைத்து கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தியால் அவர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார். தந்தையின் தற்கொலையில் சந்தேகம் இல்லை என மகள் கூறியுள்ளார்.