பாடசாலை மாணவர்களுக்காக புதிய பஸ் சேவை ஆரம்பம்!

Mayoorikka
2 years ago
பாடசாலை மாணவர்களுக்காக புதிய பஸ் சேவை ஆரம்பம்!

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் பாடசாலை மாணவர்களுக்காக, தனியார் பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி, புதிய பஸ் சேவையை ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அத்துடன், அடுத்த வாரம் பாடசாலைகளை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து சனிக்கிழமை நடைபெறும் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தற்போது காணப்படும் போக்குவரத்து சிக்கல் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அனைத்து பாடசாலைகளும் உள்ளடங்கும் வகையில் பாடசாலை ஆரம்பமாகும் நேரம் மற்றும் நிறைவடையும் நேரம் என்பனவற்றை கவனத்திற்கொண்டு இந்த புதிய பஸ் சேவை முன்னெடுக்கப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கைக்காக ஈடுபடுத்தப்படும் குறித்த பஸ்களுக்கு இலங்கை போக்குவரத்து சபை டிப்போ ஊடாக எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.

இதனைத்தவிர, மாணவர்களுக்கான சிசுசெரிய பஸ் சேவையை முறையாக முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து பிரச்சினையால், வாரத்தில் 3 நாட்களுக்கு மாத்திரமே பாடசாலைகள் நடத்தப்படுகின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!